உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிப்பு...!

World Aids Day
By Thahir 2 மாதங்கள் முன்

இன்று உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. எதனால் இன்று எய்ட் தினம் அனுசரிக்கப்படுகிறது என்பதை சற்று விரிவாக பார்க்கலாம்.

உலக எய்ட்ஸ் தினம்

1988-முதல் அனுசரிக்கப்பட்டு வரும் உலக எய்ட்ஸ் தினமானது, எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், எய்ட்ஸ் நோயால் இறந்தவர்களை கௌரவபடுத்தும் விதமாகவும் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது.

World AIDS Day is observed today

இந்த தினமானது எச்.ஐ.வி-ஆல் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் நாளாக அனைவராலும் அனுசரிக்கப்படுகிறது.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள் 

1988 ஆம் ஆண்டு இந்த தினமானது “முதல் சர்வதேச சுகாதார தினமாக” நிறுவப்பட்டது. இந்த நாளானது எச்.ஐ.வி பரிசோதனை, நோய் தடுப்பு, அனைவரிடம் உள்ள ஏற்றத்தாழ்வுகளை தடுக்க, உலக அளவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக கருதப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் இது குறித்து பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. உலக எய்ட்ஸ் தினம் ஆனது 1987ஆம் ஆண்டு, முதன் முதன்முதலாக அங்கீகரிக்கப்பட்டது.

இதன் நோக்கமானது தேசிய மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள் , சர்வதேச நிறுவனங்கள் ,மற்றும் தனிநபர்களுக்கிடையே எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது ஆகும்.

யாரால் தொடங்கப்பட்டது?

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரிகளான ஜேம்ஸ் டபிள்யூ.பன் மற்றும் தாமஸ் நெட்டர் என்பவர்களால் உலக எய்ட்ஸ் தினமானது தொடங்கப்பட்டது.

1996 முதல் UNAIDS (எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அமைப்பு)உலக எய்ட்ஸ் தினத்தை ஒருங்கமைக்கவும் மற்றும் இது பற்றி விளம்பரம் செய்யும் பொறுப்புகளையும் கொண்டுள்ளது.

இதன்பின்னர் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிசம்பர் 1ஐ உலக எய்ட்ஸ் தினமாக நவம்பர் 30,2017 அன்று அறிவித்தார்.

நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை

2021 ஆம் ஆண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட நிலவரப்படி எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 38.4 மில்லியன் ஆக இருந்தது.

இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு (25.6 மில்லியன்) ஆப்பிரிக்காவில் வாழ்கின்றனர். இங்கிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் 4,139 பேருக்கும் மேலாக எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்படுகின்றனர்.

கல்வி மற்றும் விழிப்புணர்வு இவைகளால் மட்டுமே எய்ட்ஸ் நோயை தடுக்க முடியும் என்று நாடகங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது இந்த நாளின் நோக்கமாகும்.

இந்த ஆண்டின் உலக எய்ட்ஸ் தினத்தின் முக்கிய நோக்கம்(தீம்), ‘சமமாக்குதல்(Equalize)’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி எச்.ஐ.வி நோயினால் மக்களிடையே வரும் ஏற்ற தாழ்வுகளை குறைக்கவும், எய்ட்ஸ் நோயை முற்றிலும் ஒழித்து மக்களை காக்க நாம் அனைவரும் ஒன்றாக செயல்பட வேண்டும் என்பதாகும்.

விழிப்புணர்வு பேரணி 

உலக எய்ட்ஸ் தினம் இன்று அனுசரிக்கப்படுவதை அடுத்து சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் முதல் எத்திராஜ் கல்லுாரி வரை அக்கல்லுாரி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி சென்றனர். இதில் ஏராளமான மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.