அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் - தீவிரவாதிகள் வெறிச்செயல்
அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முக்கிய அரபு அமீரக தலைநகரான அபுதாபியில், விமான நிலையத்தில் புதியதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அப்பகுதியில் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் விமான நிலையத்திலிருந்த 3 எரிபொருள் டேங்கர்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனை சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு பொறுப்பேற்றிருக்கிறது.
அபுதாபியில் மூன்று எண்ணெய் டேங்கர்களில் ட்ரோன்கள் வெடித்திருக்கலாம் மற்றும் அபுதாபியின் முக்கிய சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக கட்டுப்பட்டு வரும் கட்டுமான இடத்தில் நடந்ததாகக் காவல்துறை அறிக்கை கூறியுள்ளது.
அபுதாபியின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனமான ADNOC இன் சேமிப்புக் கிடங்கு அருகே மூன்று பெட்ரோலியம் டேங்கர்களில் தனித்தனியாக வெடிப்பு ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.