மச்சக்காரன்ய்யா... 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் இளைஞர் - இரவு மட்டும்... அப்படியா...
தாய்லாந்தைச் சேர்ந்த ஒருவர் ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் வாழ்ந்து குடும்பம் நடத்தி வரும் சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாய்லாந்தைச் சேர்ந்தவர் ஓங் டாங் சோரூட்.இவர் டாட்டூ கலைஞராக உள்ளார். இவர் 8 பேரை திருமணம் செய்து அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக எந்த வித சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்.
அத்தனை மனைவிகளும், சோரூட் மீது அளவு கடந்த காதலுடன் உள்ளனர். அவர்கள் அனைவரும் சோரூட்டை ஒரே வீட்டில் பகிர்ந்து வருகிறார்கள்.
சோரூட் தனது 8 மனைவிகளிடமும் பார்த்த இடத்திலேயே காதலில் விழுந்திருக்கிறார்.
முதல் மனைவி நாங் ஸ்பெரிட். இவரை நண்பரின் திருமணத்தில் பார்த்திருக்கிறார் சோரூட். உடனே இவரை திருமணம் செய்துள்ளார்.
பின்னர், 2-வது மனைவி நாங். இவரை எல்லை மார்கெட்டில் பார்த்திருக்கிறார். மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை சமூகவலைத்தளங்களாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவரது 7-வது மனைவியை அவரது தாயுடன் கோவிலுக்கு செல்லும் போது பார்த்திருக்கிறார்.
8வது மனைவியை மற்ற மனைவிகளுடன் விடுமுறையை கழிக்க செல்லும் போது பார்த்திருக்கிறார். இவர்களை எல்லாம் பார்த்து உடனே காதலில் விழுந்து திருமணம் செய்திருக்கிறார் சோரூட்.
அத்தனை மனைவிகளுடனும் தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார். இதில் அதிசயம் என்னவென்றால் அவர்களுக்குள் சண்டையே வருவதே கிடையாதாம். அதற்கு முக்கியமான காரணம் சோரூட்டின் குணம் தான் என்று மனைவிகளே கூறுகிறார்கள்.
அத்தனை மனைவிகள் மீதும் பாரபட்சமின்றி அன்பை பொழிந்து வருகிறார் சோரூட். ஏற்கனவே திருமணமான நபரை ஏன் திருமணம் செய்தீர்கள் என அவரது மனைவிகளிடம் கேட்ட போது அவர்கள் அளித்த ஒரே பதில் "அவர் மீது தீராத காதல் வந்துவிட்டது" என்று கூறியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் சோரூட்டிடம் படுக்கையை பகிர்ந்து கொள்வார்களாம். ஒரு மனைவி சோரூட்டுடன் படுக்கையை பகிரும் போது மற்ற மனைவிகள் வேறு ரூமில் படுத்துக்கொள்வார்களாம். இச்செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.