ஓரின சேர்க்கையாளராக அறிவித்துக்கொண்ட உலகின் முதல் இமாம் - இறுதியில் நேர்ந்த கதி
ஓரின சேர்க்கையாளராக அறிவித்துக்கொண்ட உலகின் முதல் இமாம் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
ஓரின சேர்க்கை இமாம்
உலகளவில் சில நாடுகள் ஓரின சேர்க்கை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி, ஓரின சேர்க்கையாளர்களுக்கு பல்வேறு உரிமைகளை வழங்கி வந்தாலும் சில நாடுகள் ஓரின சேர்க்கையாளர்களை தடை செய்துள்ளது.
இஸ்லாம் மதத்தில் ஓரின சேர்க்கை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், 1996 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவை சேர்ந்த இமாம் முஹ்சின் ஹென்ட்ரிக்ஸ்(Muhsin Hendricks), தன்னை வெளிப்படையான ஓரின சேர்க்கையாளராக அறிவித்து இஸ்லாமியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினர்.
சுட்டுக்கொலை
இந்நிலையில் நேற்று முன்தினம்(15.02.2025) காலை தெற்கு நகரமான க்வெபெர்ஹா அருகே ஹென்ட்ரிக்ஸ் பயணித்த காரை மறித்த மர்ம நபர்கள், பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஹென்ட்ரிக்ஸ் உயிரிழந்துள்ளார்.
இந்த மசூதி ஓரினச்சேர்க்கையாளர்கள் மற்றும் பிற ஓரங்கட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான புகலிடமாக கேப் டவுனில் ஒரு மசூதியை நடத்தி வந்தார். சமீபத்தில் இமாம் ஒரு லெஸ்பியன் திருமணத்தை அங்கு நடத்தி வைத்ததாகவும், அதன்பின்னரே இந்த கொலை சம்பவம் நடந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபாலினத்தவர், திருநங்கைகள் சங்கம் (ILGA) இந்தக் கொலையைக் கண்டித்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.