அமெரிக்காவில் நன்றி படையல் திருவிழா - ராணுவ வீரர்களுக்கு விருந்து கொடுத்த பைடன்
world
By Nandhini
அமெரிக்காவில் நன்றி படையல் திருவிழா கொண்டாட்டத்திற்காக தயாரிக்கப்பட்ட உணவுகளை பார்சல் செல்வதற்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் உதவி செய்தார்கள்.
தமிழ்நாட்டில், எப்படி அறுவடை நாளை பொங்கல் தினமாக கொண்டாடுகிறோமோ, அதேபோல், அமெரிக்காவில் நவம்பர் 25ம் தேதி, நன்றி படையல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு அமெரிக்காவில் மதிய உணவு வழங்கப்படும். இந்நிலையில், இந்த உணவுகளை ஜோ பைடன் தனது மனைவி ஜில் பைடனுடனும், கமலா ஹாரிஸ் தனது கணவர் டக்ளஸ் எம்ஹாப்புடன் பார்சல் செய்வதற்கு உதவி செய்தார்கள். முன்னதாக அதிபர் பைடன், தனது மனைவி ஜில் பைடனுடன் இணைந்து ராணுவ வீரர்களுக்கு விருந்து கொடுத்தனர்.
