சரசரவென சாலையில் சென்ற லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் - அழகை பிரதிபலிக்கும் வீடியோ

world
By Nandhini Nov 24, 2021 03:58 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் தீவிலிருந்து கடற்கரைக்கு லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகள் இடம்பெயர்ந்துள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கத்திற்காக இவ்வாறு நண்டுகள் இடப்பெயர்ந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்தாண்டும் லட்சக்கணக்கான செந்நிற நண்டுகள் கூட்டம் கூட்டமாக சாலைகளை கடந்து கடற்கரையை நோக்கி பயணம் செய்தன. 

இதனால் சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஓரே நேரத்தில் லட்சக்கணக்கான நண்டுகளின் இந்தப் பயணம் காண்போர் கண்களுக்கு விருந்து அளித்தது. இந்த நண்டுகள் இடம் பெயர்ந்து செல்வதை கண்டு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிலர் புகைப்படம், வீடியோ எடுத்துக் கொண்டனர்.