கமலா ஹாரிஸை அமெரிக்க அதிபராக்கிய பைடன் : வெளியான தகவல்

world
By Nandhini Nov 21, 2021 07:23 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் , துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக அதிபர் அதிகாரத்தை வழங்கி உத்தரவு பிறப்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதிபர் ஜோ பைடன் மருத்துவ பரிசோதனைக்காக வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக, மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிகிச்சையிலிருந்து குணமாகும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு தற்காலிகமாக வழங்க உத்தரவிட்டிருக்கிறார்.

இதனையடுத்து, ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்ததாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவில் பெண் ஜனாதிபதியாக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். 

கமலா ஹாரிஸை அமெரிக்க அதிபராக்கிய பைடன் : வெளியான தகவல் | World