அமெரிக்காவில் திடீரென காற்றில் பறந்த பணம் - உற்சாகமாக அள்ளிச் சென்ற பொதுமக்கள்

world
By Nandhini Nov 21, 2021 05:43 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்காவில் பணம் கொண்டு சென்ற டிரக் லாரியியிலிருந்து பணம் பறந்ததால், சாலையில் கிடந்த பணத்தை மக்கள் உற்சாகமாக அள்ளிக் கொண்டு ஓடிய வீடியோ காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில நெடுஞ்சாலை சான் டியாகோ, அருகே வடக்கு பகுதியில் பணத்தினை டெபாசிட் செய்வதற்காக மத்திய ரிசர்வ் வங்கியை நோக்கி, கடந்த திங்கள்கிழமை காலை டிரக் சென்றிருக்கிறது. அப்போது, திடீரென டிரக்கின் பின்பகுதியிலிருந்து ஒரு கதவு திறந்து கொண்டது. இதனால், உள்ளே இருந்த பணக் கட்டுகள் அப்படியே காற்றில் பறந்து, சாலையில் சிதறி ஓடின.

இதைக் கண்ட அந்த வழியே சென்ற பொதுமக்கள் உடனடியாக தங்களுடைய கார் மற்றும் வாகனத்தினை நிறுத்திவிட்டு, சாலையில் கிடந்த பணத்தினை எடுக்க ஓடி வந்தனர். பின்பு சிதறிய பணத்தை உற்சாகமாக மக்கள் அள்ளிக்கொண்டு சென்றனர்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் விரைந்து வந்த FBI மற்றும் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரிகள், சாலையில் பணத்தினை எடுத்த மக்களை தடுத்து நிறுத்தினார்கள்.

மேலும், சாலையில் கிடந்த பணத்தினை எடுத்துக் கொண்டு சென்ற மக்களை FBI மற்றும் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரிகள் தேடி வருகிறார்கள். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் பரவி வருகிறது.

பணத்தினை எடுத்தவர்களை எளிதில் அடையாளம் காண முடியும் எனவும், 48 மணி நேரம் அவகாசம் கொடுக்கிறோம், அதற்குள் வந்து Vista-வில் உள்ள அலுலகத்தில் ஒப்படைக்கும் படியும், அப்படி இல்லை என்றால் கிரிமினல் குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ள நேரிடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எவ்வளவு பணம் காணமல் போயுள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அமெரிக்காவில் திடீரென காற்றில் பறந்த பணம் - உற்சாகமாக அள்ளிச் சென்ற பொதுமக்கள் | World