மலேசியாவில் தமிழருக்கு தூக்கு - அரசாங்கம் அளித்த விளக்கம்

world
By Nandhini Nov 16, 2021 07:52 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

மலேசியாவில் வசிக்கும் தமிழருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்து அந்நாட்டு அரசாங்கம் தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ளது.

மலேசியாவிலிருந்து தனது தொடையில் மறைத்து வைத்து 42.72 கிராம் ஹெராயின் போதைப்பொருளை கடத்தி வந்ததற்காக 2009ம் ஆண்டு சிங்கப்பூர் அதிகாரிகளால் நாகேந்திரன் கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் கடத்திய வழக்கில் மலேசியரான நாகேந்திரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த புதன்கிழமை அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, 33 வயதாகும் நாகேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வழக்கு குறித்து மலேசியா பிரதமர் இஸ்மாயில் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் டத்தோ சயிஃபுதீன் ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது -

போதை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகேந்திரனுக்கு நியாயமான முறையில் தான் மரணதண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் முறையான விசாரணை நடந்தது. சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் அனைத்து வித நடைமுறைகளும் உரிய முறையில் பின்பற்றதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மலேசியாவில் தமிழருக்கு தூக்கு - அரசாங்கம் அளித்த விளக்கம் | World