இலங்கைக்கு வரும் 26ம் தேதி வருகிறார் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர்

world
By Nandhini Nov 15, 2021 06:38 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடா இம்மாதம் 26ம் தேதி இலங்கைக்கு வருகை தர இருக்கிறார்.

இலங்கையில் சில தினங்கள் தங்கியிருந்து அடிமைத்துவத்தின் சமகால வடிவங்கள் தொடர்பில் ஆராய்ந்து ஐ.நாவிற்கு அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறார் அவர். இது தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளைத் தனக்கு அனுப்பி வைக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கேட்டுள்ளார்.

குறிப்பாக தொழிலாளர் உரிமைகள், அடிமைத்துவம், வலுகட்டாயமாகத் தொழிலில் ஈடுபடுத்துதல், சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்துதல் உள்ளிடங்கிய அடிமைத்துவத்தின் சமகால வடிவங்களுடன் தொடர்புடைய தகவல்களை அனுப்பி வைக்கலாம் என்று ரொமோயா ஒபொகாடா தெரிவித்திருக்கிறார்.

அதன்படி மேற்குறிப்பிட்ட தொடர்பான தகவல்கள் மற்றும் தரவுகளை அதனுடன் சம்பந்தப்பட்ட தரப்பினர் ohchr-srslaveryShun.org என்ற மின்னஞ்சல் முகவரியின் ஊடக ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ரொமோயா ஒபொகாடாவிற்கு அனுப்பி வைக்க முடியும். 

இலங்கைக்கு வரும் 26ம் தேதி வருகிறார் ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் | World