சுவிங்கம் மென்றால் 2 ஆண்டுகள் சிறை தண்டனையா? இது எந்த நாட்டில் தெரியுமா?
சிங்கப்பூரை குறித்த தண்டனை ஒன்று சமூகவைலத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிறிய நாடான சிங்கப்பூரில் எல்லா இடங்களும் சுத்தமாக இருக்கும். இதற்கு காரணம் அந்நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ . அவர் அந்நாட்டை சுத்தமாக வைத்திருக்க பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தார். அந்த சட்டங்களில் ஒன்று தான் சுவிங்கம் விற்பனை தடை. ஒருவர் சுவிங்கம் மென்றுவிட்டு அதை தெரு, ரோடு என பொது இடங்களில் துப்பியதால், சுவிங்கத்திற்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டது. 1992ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த தடை நாடே சுத்தமானது. இருந்தாலும் கடந்த 2004ம் ஆண்டு இந்த சட்டம் மீண்டும் பரிசிலனைக்கு கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து, சுவிங்கம் சிலரது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதால் அதன் மீதான தடை நீக்கப்பட்டது. அதே நேரத்தில் மருத்துவ குணமுள்ள சுவிங்கம், பல் மருத்துவத்திற்கு தேவையான சுவிங்கம், நிக்கோட்டின் சுவிங்கம், ஆகியவற்றிற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், உரிய அனுமதியின்றி சுவிங்கத்தை மென்றாலோ அல்லது பொது இடத்தில் துப்பினாலோ அவர்களுக்கு அந்நாட்டு சட்டப்படி இந்திய பண மதிப்பில் ரூ74 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
இந்த அபராதம் முதன் முறைக்கு மட்டுமே மீண்டும் அதே தவறை செய்தால் ரூ.1 லட்சம் அபராதம் மற்றும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.