ஜப்பானில் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் கோழிகள்- வெளியான அதிர்ச்சி தகவல்
ஜப்பான் நாட்டில் சமீபத்தில் பரவிய பறவை காய்ச்சல் வரலாறு காணாத மோசமான பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இதனால் 9.87 மில்லியன் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் 3ல் ஒரு பங்கிற்கும் அதிகமான கோழி இறைச்சி விற்பனையை பாதித்துள்ளது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் வடகிழக்கு பகுதியின் அகிதா மாகாணத்தில் உள்ள யோகோடே சிட்டியின் கோழிப் பண்ணையில் கோழிகளை பிடித்து மரபணு பரிசோதனை செய்ததில் 12 கோழிகளுக்கு பறவை காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1,43,000 கோழிகள் இந்த காய்ச்சலால் கொல்லப்பட்டிருக்கின்றன. இந்த பண்ணையை சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் மாகாணங்களிலும் கோழிக்கறி, முட்டை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. டுள்ளது. சிக்கன், முட்டைகள் சாப்பிடுவதால் மனிதர்களுக்கு பறவைக் காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்பு கிடையாது. இதனால் பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய தேவையில்லை என்று நடைத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
