நோபல் பரிசு வென்ற மலாலாவுக்கு எளிமையான முறையில் திருமணம் முடிந்தது
world
By Nandhini
பெண்களின் கல்வி உரிமைக்காக போராடி வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த மலாலா, தனக்கு திருமணம் ஆகிவிட்டதாக டுவிட்டரில் பதிவி ஒன்றை வெளியிட்டுள்ளார். பெண்களுக்கு கல்வி வேண்டும் என்பதற்காக போராடிய மலாலாவை தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் மலாலா படுகாயம் அடைந்தார்.
இதனையடுத்து, அவர் லண்டனில் சிகிச்சை பெற்றார். அவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், 24 வயதான மலாலா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவில், அசீர் என்பவரை திருமணம் செய்து கொண்டதாகவும், பிர்மிங்காமில் உள்ள தனது இல்லத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றதாகவும் தெரிவித்திருக்கிறார்.
