முதல்முறையாக விண்வெளியில் நடந்து சென்று சீன வீராங்கனை சாதனை

world
By Nandhini Nov 09, 2021 04:13 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சீனாவைச் சேர்ந்த ஒரு பெண், முதன் முறையாக விண்வெளியில் நடந்து சென்று சாதனை படைத்திருக்கிறார்.

விண்வெளியில் 'டியன்ஹி' என்ற ஆய்வு நிலையத்தை சீனா அமைத்து வருகின்றது. கடந்த அக்டோபர் 16ம் தேதி இந்த ஆய்வு நிலையத்திற்கு வங் யபிங் என்ற பெண் உட்பட 3 பேர் 'ஷென்ஷோ - 13' விண்கலத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்கள். இவர்கள் 3 பேரும் டியன்ஹி ஆய்வு நிலையத்தில் 6 மாதங்கள் தங்கி கட்டுமான பணிகளை மேற்கொள்வார்கள் என்று சீனா தெரிவித்தது.

இந்நிலையில், நேற்று டியன்ஹி ஆய்வு நிலையத்திலிருந்து, வங் யபிங், ஜாய் ஆகியோர் வெளியேறி விண்ணில் நடந்து, வெளிப்புற கட்டுமான பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு, டியன்ஹியில் இருந்த 3வது விண்வெளி வீரரான யி குவாங்பூ உதவி செய்துள்ளார். 6 மணி நேரம் விண்வெளியில் நடந்து பல்வேறு பணிகளை செய்து முடித்த பின், வங் யபிங், ஜாய் ஆகியோர் டியன்ஹிக்கு திரும்பியுள்ளனர்.

இதனால், விண்வெளியில் நடந்த முதல் சீன விண்வெளி வீராங்கனை என்ற சிறப்பை, வங் யபிங் பெற்றிருக்கிறார். ஒரு குழந்தைக்கு தாயான வங் யபிங், விமானப் படையில் பணியாற்றி, விண்வெளி துறைக்கு வந்தார். ரஷ்யாவின் வாலன்டினா தெரஷ்கோவாவிற்கு பின், விண்வெளியில் நடந்த 2வது பெண் என்ற பெருமையும், வங் யபிங்கிற்கு கிடைத்திருக்கிறது. 

முதல்முறையாக விண்வெளியில் நடந்து சென்று சீன வீராங்கனை சாதனை | World

முதல்முறையாக விண்வெளியில் நடந்து சென்று சீன வீராங்கனை சாதனை | World