வீடியோ வெளியிட்ட வேகத்தில் வெடித்து சிதறிய விமானத்தில் பலியான பிரபல பாடகி - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்

world
By Nandhini Nov 07, 2021 07:37 AM GMT
Report

பிரேசிலை சேர்ந்தவர் மரிலியா மெடன்கா (26). இவர் பிரபல பாடகி. கடந்த வெள்ளிக்கிழமை அவர் தயாரிப்பாளர் ஹென்ரிக் ரிபேரோ, உதவியாளர் அபிசீலி சில்வேரா டியஸ் ஆகியோருடன் தனி விமானத்தில் பயணம் செய்தார். ஆனால், மினாஸ் கெராய்ஸ் மாநிலத்தில் அந்த விமானம் திடீரென விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானத்தில் இருந்த மரிலியா, விமானி, துணை விமானி என 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மரிலியா விமானத்தில் ஏறியபோது அதை வீடியோ எடுத்து தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். காரடிங்கா என்கிற இடத்தில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்ல உள்ளதாக அந்த பதிவில் கூறினார்.

இந்நிலையில், இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சொனாரா தனது டுவிட்டரில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில், மரிலியா செய்தி அறிந்து மொத்த நாடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறது. இன்றைய தலைமுறை பாடகிகளில் மெரிலியா சிறந்தவர். எங்களுக்கு நெருக்கமான ஒருவரை இழந்தது போன்று இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

மெரிலியாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வதாக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.