கொட்டித் தீர்க்கும் கனமழையில் மூழ்கியது வாஷிங்டன் - சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு
world
By Nandhini
அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி மாகாணத்தில் கடந்த 18 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த 2003ம் ஆண்டு வீசிய புயலில் வாஷிங்டன் டிசி இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.
அதனையடுத்து, இப்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டிருப்பதாக தேசிய வானிலை சேவை மையம் அறிவித்துள்ளது. கடும் மழை, புயல், காற்று காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்கள்.
