தந்தையின் இறந்த உடல் அருகே இளம்பெண் செய்த செயல்: கண்டனங்கள் தெரிவித்த மக்கள்
அமெரிக்காவில் முன்னாள் போர் வீரர் ஒருவர் மரணமடைந்தார். அவரின் இறுதிச் சடங்கின்போது, அவரது மகள் கவர்ச்சி உடையுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.
அந்த புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டார். இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பெயர் வெளியிடப்படாத அந்த இளம்பெண், சவப்பெட்டியில் வைக்கப்பட்ட தன் தந்தையின் உடலுக்கு முன், கவர்ச்சியான உடை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்திருக்கிறார்.
பின்னணியில் அவரது தந்தையின் உடலும், அவர் மீது போர்த்தப்பட்ட அமெரிக்கக் கொடியும் தெரிய, அவர் வெளியிட்ட புகைப்படங்கள் மக்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
ஒரு தந்தையில் இறுத்திச்சடங்கின்போது இப்படியா நடந்து கொள்வது என்றும், இப்படியா ஒரு பெண் தன் தந்தையின் இறுதிச்சடங்கில் உடையணிவார் என்றும் மக்கள் அவரை கடுமையாக சமூகவலைத்தளங்களில் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.
