பிரான்சில் மருத்துவமனை வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு

world
By Nandhini Oct 26, 2021 04:17 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிரான்சில் மருத்துவமனை வாசலில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பிரான்சின் கிழக்கு பைரனீஸில் உள்ள பெர்பிக்னன் மருத்துவமனை வாசலில் நேற்று அதிகாலை 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் திடீரென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நபர் ஒரு வீடற்றவர் என்பதும், மொரோக்கா நாட்டைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.   

பிரான்சில் மருத்துவமனை வாசலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபரால் பரபரப்பு | World