‘அணுகுண்டுகள் மட்டுமே பூமியை காக்கும்’ - விஞ்ஞானிகளின் கூறிய ஆச்சர்ய தகவல்

world
By Nandhini Oct 13, 2021 06:23 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அணுகுண்டு உலகம் முழுவதையும் அழிக்கும் சக்தி வாய்ந்த பொருளாக கருதப்பட்டு வருகிறது. ஆனால், அணு குண்டு பற்றி விஞ்ஞானிகள் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர்.

பூமியை சிறுகோள்களிலிருந்து காப்பாற்ற அணுகுண்டுகள் பயன்படுத்தப்படலாம் என்று வெளிநாட்டு விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். எதிர்காலத்தில் சிறு கோள்கள் பூமியை தாக்குவதை தடுக்க அணு குண்டுகளை பயன்படுத்துவதை விஞ்ஞானிகள் ஆதரித்திருக்கிறார்கள்.

சில காலமாக பூமிக்கு அருகில் சிறுகோள்கள் கடந்து செல்லும் சம்பவங்கள் குறித்த செய்தி உலகத்துக்கும் கவலை தரும் செய்தியாக இருக்கிறது. சிறு கோள்கள் பூமியில் மோதினால், அவை மனிதர்கள் உயிருக்கு மிகப் பெரிய ஆபத்தையும், அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.

இந்நிலையில், எதிர்காலத்தில் ஒரு பெரிய சிறுகோள் பூமியுடன் மோதினால் என்ன நடக்கும் என்பதை அறிவதில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆக்டா ஆஸ்ட்ரோநாட்டிகாவில் என்னும் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது -

டைனோசர்களை பூமியிலிருந்து முற்றிலுமாக அழிந்து போன நிலையில், மனிதர்களுக்கும் இதே போன்ற ஒன்று நடக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனாலும், ஊகங்கள் தவிர, உலகின் விஞ்ஞானிகள் பூமிக்கு அருகில் வரும் சிறுகோள்களை அகற்றுவதற்கான தொழில்நுட்பம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.

இதற்காக, சிறுகோள்கள் பூமியின் மீது மோதும் அச்சுறுத்தலை அகற்றுவதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். விஞ்ஞானி பேட்ரிக் கிங் தலைமையிலான புதிய ஆராய்ச்சியில், சரியான நேரத்தில் அதிக ஆற்றலின் உதவியுடன், பூமியை தாக்க வரும் சிறுகோள்களை, அணுகுண்டின் உதவியுடன் சிறிய துண்டுகளாக உடைக்கலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

‘அணுகுண்டுகள் மட்டுமே பூமியை காக்கும்’ - விஞ்ஞானிகளின் கூறிய ஆச்சர்ய தகவல் | World