செல்பி புகழ் கொரில்லா... தனது பாதுகாவலரின் மடியில் தன்னுயிரின் இறுதி மூச்சை விட்டு உயிரிழந்தது

world
By Nandhini Oct 07, 2021 11:19 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கடந்த 2019-ம் ஆண்டு செல்பி புகைப்படம் மூலம் வைரலான நடாகாஷி என்ற கொரில்லா இறந்தது.

கடந்த 2019-ம் ஆண்டு காங்கோ நாட்டில் எடுக்கப்பட்ட ஒரு செல்பி புகைப்படம் மிகப்பெரிய அளவில் சமூகவலைத்தளங்களில் வைரலானது. இப்புகைப்படம் வைரலாக காரணம் கொரில்லா குரங்கு பாதுகாவலர் ஒருவர் செல்ஃபீ எடுக்க அதற்கு கொரில்லா குரங்குகள் போஸ் கொடுத்தது தான். இதனால் அந்த புகைப்படம் உலகளவில் பெரியப் பெரிய அளவில் வைரலானது.

இந்தப் புகைப்படம் காங்கோ நாட்டில் உள்ள விருங்கா தேசிய பூங்காவில் எடுக்கப்பட்டது. வைரலான 2 குரங்குகளின் பெயர் நடாகாசி, மாட்டாபிஸி. இதில் 14-வயதான நடாகாசி என்ற குரங்கு கடந்த செப் 26-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக இறந்தது.

இந்தச் செய்தியை விருங்கா தேசிய பூங்கா வெளியிட்டப்பட்டுள்ளது. கொரில்லா குரங்குகளுடன் செல்ஃபீ எடுத்து வெளியிட்ட வன பாதுகாவலரும், பராமரிப்பாளருமான மேத்யூ ஷவாமு-வின் மடியிலேயே நடாகாஷி தனது இறுதி மூச்சை விட்டுள்ளது.

இந்தச் செய்தி அறிந்த பலர் அதிர்ச்சி அடைந்து தங்களுடைய இரங்கலை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.