ஆசிரியரை சந்தித்த ரஷ்யா அதிபர் - கட்டியணைக்கும் நெகிழ்ச்சி புகைப்படம் வைரல்
ரஷ்யா அதிபர் தனது வகுப்பு ஆசிரியருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறார்.
ஆசிரியர்களின் பங்களிப்பை போற்றும் விதமாக நேற்று உலகம் முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அந்நாட்டு அதிபரான விளாடிமிர் புதினின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டது.
அதில் ஜனாதிபதி தனக்கு எடுத்த வகுப்பு ஆசிரியரை நேரில் சந்தித்து கட்டியணைக்கும் நெகிழ்ச்சியான தருணம் புகைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. இதுமட்டுமின்றி விளாடிமிர் புதிர் தனது குழந்தைப் பருவத்தின் போது அவர் ஆசிரியருடன் எடுத்து கொண்ட புகைப்படமும் சேர்ந்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது.
மேலும் ட்விட்டர் பக்கத்தில், உலக அளவில் ஆசிரியர்கள் தினத்தை போற்றுவதற்கு முன்னரே ரஷ்யா கலாச்சாரத்தில் அவர்கள் எப்போதும் மிகுந்த மரியாதை மற்றும் நேர்மையுடன் நடத்தப்படுகிறார்கள், அதிலும் நாம் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை ஒரு தலைவராக சந்தித்திருக்கிறோம். ஆனால் இந்த புகைப்படங்கள் அவரை ஒரு வித்தியாசமாக நம்மிடம் காட்டுகிறது.
