"டிக்டாக் சவால்" - 23 காந்தங்களை ஒரே நேரத்தில் விழுங்கிய சிறுமி - பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

world
By Nandhini Oct 04, 2021 11:39 AM GMT
Report

இங்கிலாந்தில் உள்ள சசெக்ஸ் பகுதியைச் சேர்ந்த 6 வயதுடைய சிறுமி, டிக்டாக்கில் ஒரு சவாலை மேற்கொண்டிருக்கிறாள். அதற்காக, 23 காந்தங்களை ஒரே சமயத்தில் விழுங்கி உள்ளாள்.

இதனால், சிறுமி வயிற்றுவலி, குமட்டல் மற்றும் வாந்தியால் அவதிப்பட்டதால், சிறுமியின் பெற்றோர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தார்கள். சிறுமியை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் விழுங்கிய 23 காந்தங்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முடிவு செய்தனர். பின்பு, வயிற்றிலிருந்த 23 காந்தங்களை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் நீக்கினார்கள்.

இருப்பினும் குடலுக்கு இடையில் காந்தங்கள் மாட்டிக் கொண்டதில் சிறுமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சரியான நேரத்தில் சிறுமியை மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், தற்போது பல முயற்சிகளுக்குப் பின்பே சிறுமி நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் கூறியுள்ளனர்.   

"டிக்டாக் சவால்" - 23 காந்தங்களை ஒரே நேரத்தில் விழுங்கிய சிறுமி - பின்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்! | World