விலாங்கு மீனை எடுத்து ஆசனவாயில் நுழைத்த நபர் - அடுத்து நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வசித்து வந்த நபர் ஒருவர் மலச்சிக்கலால் மிகவும் அவதிப்பட்டு வந்திருக்கிறார். இதனால் குடலின் இயக்கத்தை சீரமைக்க, சுமார் 20 செ.மீ. நீளமுள்ள விலாங்கு மீனை ஆசனவாய்க்குள் நுழைத்திருக்கிறார்.
ஆனால் எதிர்பாராத விதமாக அந்த மீன் அவரது அடி வயிற்று பகுதிக்குள் நுழைந்து விட்டது. இதனால், அவருக்கு வலி அதிகமானது. வலியால் அலறி துடித்தார். வலியை தாங்க முடியாததால் பக்கத்தில் இருந்த மருத்துவமனைக்கு ஓடினார்.
அப்பொழுது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த நபரின் வினோத செயலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே, அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் அவரது அடிவயிற்றில் உள்ள விலாங்கு மீனை அகற்றினார்கள். அப்போது, அந்த விலாங்கு மீன் அவருடைய வயிற்றில் உயிருடன் இருந்தது.
அதுமட்டுமல்லாமல், சிறிது நேரம் தாமதாகியிருந்தாலும், அவருடைய உயிருக்கே ஆபத்தாக மாறியிருக்கும் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.
இந்த மாதிரியான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்று மருத்துவர்கள் கேட்டுக் கொண்டனர்.
