லண்டன் லாட்டரியில் விழுந்த 20 கோடி பரிசுத்தொகை – யாரும் வாங்க வராததால் பறிபோனது!

world
By Nandhini Jul 30, 2021 09:35 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

தெற்கு லண்டனில் உள்ள லீவிஸாம் என்ற லாட்டரி கடை ஒன்று உள்ளது. அந்த கடையில் வாங்கப்பட்ட VSHS38986 என்ற எண்ணுக்கு பத்து லட்சம் பவுண்ட்கள் பரிசுத் தொகை கிடைத்தது. அதாவது அந்த அதிர்ஷ்டசாலிக்கு ரூ. 20 கோடி பணம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது.

அந்த அதிர்ஷ்டசாலிக்கு 6 மாதங்கள் வரைக்கும் காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த பணத்தை வாங்க யாரும் வாங்க வராததால் நேற்று நள்ளிரவோடு காலக்கெடு முடிவடைந்தது. இதனால், அந்த நபர் 20 கோடி ரூபாய் பரிசுத்தொகையை இழந்துவிட்டார்.

அந்த பணத்தை ஏதேனும் ஒரு நிதியுதவி திட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று லாட்டரி நிறுவனம் அறிவித்திருக்கிறது.     

லண்டன் லாட்டரியில் விழுந்த 20 கோடி பரிசுத்தொகை – யாரும் வாங்க வராததால் பறிபோனது! | World