வெள்ளத்தில் சிக்கிய டிரக்.. வாழ்வா? சாவா? விளிம்பில் தவித்த பயணிகள்... பறந்து வந்து உதவி செய்த நபரின் வீடியோ வைரல்!

world
By Nandhini Jul 27, 2021 10:05 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை புயல் தாக்கி நாசமாக்கியது. அப்போது, பல பகுதிகளில் வெள்ளம், மின் தடை மற்றும் பிற சேதங்களால் பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், அரிசோனாவில் பயங்கர வெள்ளத்தில் டிரக் ஒன்று சிக்கியது. அப்போது, அதில் பயணித்த இருவர் டிரக் மேலே ஏறி உட்கார்ந்தனர்.

வாழ்வா? சாவா? என்று உயிரை கையில் பிடித்துக்கொண்டு விளிம்பில் தவித்த அவர்களை, ஹெலிகாப்டரில் வந்த மீட்புக்குழுவினர், டிரக் மேலே இருந்த இருவரை பத்திரமாக மீட்டனர். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.