டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : வரவிருக்கும் பேராபத்து - எச்சரிக்கை விடுத்த வானிலை நிபுணர்கள்!
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் போட்டிகளுக்கு வில்லனாக இன்னொரு புதிய சிக்கல் உருவாகி வருவதாக பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது.
டோக்கியோவில் வழக்கத்துக்கு மாறாக கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
முதலில் கொரோனா அச்சுறுத்தலால் போட்டிகள் தொடங்க தாமதமானது. அதைத் தொடர்ந்து தாங்க முடியாத வெப்பம் காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிப்போயின. ஆனால், தற்போது சூறாவளியுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக பகீர் தகவல் வெளியாகி இருக்கிறது.
மணிக்கு 56 மீற்றர் அளவுக்கு காற்று வீசும் எனவும், செவ்வாய்க்கிழமை முதல் கனமழை ஜப்பானை தாக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதுவும் டோக்கியோவை நோக்கி இந்த புயல் நகர்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனையடுத்து, திங்கள்கிழமை நடத்த திட்டமிட்டிருந்த படகு போட்டிகளை ஞாயிறன்று நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
புயலுடன் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் பல போட்டிகள் தாமதமாகலாம் எனவும், பல மணி நேரம் போட்டிகள் நடத்த முடியாமல் ஸ்தம்பிக்கும் நிலை கூட வரலாம் என வானிலை ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
