லண்டனில் இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட 22 வயது இளம் பெண்? வெளியான வீடியோவால் பரபரப்பு!

world
By Nandhini Jul 23, 2021 05:44 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

லண்டனில் 22 வயது மதிக்கத்தக்க இஸ்லாமிய இளம் பெண் ஒருவர் இனவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகியுள்ள வீடியோவால் அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இரயிலில் பெண் ஒருவர் இனவெறியை தூண்டும் வகையில், கருப்பின மனிதருடன் சண்டை போடுவது போன்ற காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.

கடந்த 16ம் தேதி லண்டனின் West Ham-க்கு அருகில் Basildon-ல் இரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது, இரவு 11 மணிக்கு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதில், Hassina Ahmed என்ற 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண், இரயிலில் இருந்த அல்ஜீரியரை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டுவது போன்ற காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோ குறித்து அப்பெண் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றில் விளக்கம் அளித்து பேசியதாவது -

அந்த அல்ஜீரிய நபர், இரயிலில் பாலியல் ரீதியாக தன்னை நெருங்கி போன் நம்பரைக் கேட்டார். இதனால் நான் மிகுந்த அச்சத்தில் இருந்தேன்.

அப்போது அவர் தான் ஒரு இஸ்லாமியர் என்பதை அறிந்து கொண்ட பின், தன்னுடைய ஆடைகள் அணிருந்திருப்பதைக் கூறி அவமானப்படுத்தினார்.

நீங்கள் எப்படிப்பட்ட இஸ்லாமிய பெண்? உங்கள் உடலைக் காட்டுகிறீர்கள்.

நீங்கள் ஒரு என்று மோசமான வார்த்தைகளால் என்னை திட்டினார். அவர் அப்படி திட்டியதால் எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. அதனால்தான், தன்னைக் தற்காத்து கொள்ள, அப்படி நடந்து கொண்டேன். நான் ஒரு இஸ்லாமியர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்.

எந்த ஒரு மதமும், உடலை மூடிமறைக்கத்தான் வேண்டும் என்று சொல்லவில்லை. நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது பற்றி எனக்கு நன்றாக தெரியும். இதை நான் நிலையாக கையாண்டிருக்கலாம், ஆனால் அன்று நான் அளவுக்கு அதிகமான குடித்துவிட்டேன்.

அதனால், போதையில் இப்படி நடந்து கொண்டேன். இதற்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஆனால், அந்த அல்ஜீரியன் தான் எனக்கு கோபம் வரும்படி நடந்து கொண்டார். என்னை தற்காத்து கொள்ளதான் நான் இப்படி செய்தேன்.

இது எப்படி இனவெறியாக இருக்க முடியும்? நான் கருப்பின மக்களுக்கு எதிரானவள் இல்லை. அவர்களை மதிப்பவள்.

நான் கிழக்கு லண்டனில் வசித்து வருகிறேன். என்னுடைய தாயார் கொலாம்பியாவைச் சேர்ந்தவர், தன்னுடைய தந்தை கென்யாவைச் சேர்ந்த இஸ்லாமியர். இந்த வீடியோ வைரலானதற்கு பின்பு எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.

இது குறித்து காவல்நிலையத்திற்கு நானே சென்று என் தவறை ஒப்புக்கொண்டேன்.

எனக்கு இப்போது வீட்டை விட்டு வெளியே வரவே ரொம்ப பயமாக இருக்கிறது.

அந்த நபர் தூண்டப்பட்டதன் காரணமாகவே நான் அப்படி பேசினேன். இது ஒரு இனவெறி தாக்குதல் இல்லை.

இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் கடந்த 21ம் தேதி அவர் காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரை பதிவு செய்த போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

லண்டனில் இனவெறி தாக்குதலில் ஈடுபட்ட 22 வயது இளம் பெண்? வெளியான வீடியோவால் பரபரப்பு! | World