6,300 அடி மரண பள்ளத்தாக்கில் ஊஞ்சல் ஆடிய பெண்கள் - கண்இமைக்கும் நேரத்தில் நடந்த கொடூரம் – பதற வைக்கும் வீடியோ!

samugam
By Nandhini Jul 15, 2021 09:08 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ரஷ்ய குடியரசான தாகெஸ்தானில் அமைந்துள்ளது சுலக் பள்ளத்தாக்கு. இந்தப் பள்ளத்தாக்கு 6,300 அடி உயரம் கொண்டது. சுற்றுலாதலமாக விளங்கும் இங்கு பல்வேறு நாட்டைச் சேர்ந்தவர்களும் வருகை புரிவார்கள்.

இங்கு உயிருக்கு ஆபத்தான த்ரில்லிங் ஊஞ்சல் சவாரி பிரபலமானது. இந்த பள்ளத்தாக்கிற்கு சுற்றுலா வந்த இரு பெண்கள் இந்த ஊஞ்சலில் ஆட வந்தனர். பிறகு, இருவரும் ஊஞ்சலில் அமர பணியாளர் ஒருவர் ஊஞ்சலை தள்ளிவிட ஆரம்பித்தார். சிறிது சிறிதாக வேகப்படுத்தினார்.

அவர்களும் ஆரம்பத்தில் இந்த ஊஞ்சல் சவாரியில் மிக மகிழ்ச்சியுடன் பயணம் செய்தார்கள். அப்போது ஊஞ்சலின் வேகம் காரணமாக கம்பத்தில் பட்டப்பட்டிருந்த செயின் அறுந்து விழுந்தது.

இதனால் இரு பெண்களும் பள்ளத்தாக்கில் நிலை தடுமாறி விழுந்தனர். அங்கிருந்தவர்கள் இச்சம்பவத்தை பார்த்து அலறினார்கள். இந்தச் சம்பவத்தில் அவர்கள் இருவரும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றுலா துறை அமைச்சகம் கூறியுள்ளது.