இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓட்டம்!

world
By Nandhini Jul 10, 2021 10:39 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவாகியுள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில் கூறுகையில், இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி தீவில் உள்ள மனாடோ நகரில் 68 கி.மீ ., ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று தகவலில் கூறியுள்ளது. 

சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் மக்கள் பீதி அடைந்து அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினர். சில பகுதிகளில் வீடுகள் சேதமடைந்தன. மேலும் சில இடங்களில் சாலைகளில் விரிசல்கள் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட முழுமையான சேதங்கள் குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. கடந்த ஜனவரி மாதம் சுலவேசியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் வீட்டை விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓட்டம்! | World