கழிப்பறை கோப்பைக்குள் இருந்த மலைப்பாம்பு.... பார்க்காமல் அமர்ந்த முதியவர்! அடுத்து நடந்தது என்ன?
ஆஸ்திரியாவில் 24 வயதாகும் ஒரு இளைஞர் வீட்டில் விஷமில்லாத பாம்புகளை வளர்த்து வந்தார். அந்த பாம்புகளில் 1.6 மீட்டர் கொண்ட ஒரு மலைப்பாம்பு வடிகால் வழியாக பக்கத்து வீட்டு கழிப்பறை குழிக்குள் நுழைந்துள்ளது. அந்த சமயத்தில் 65 வயதான நபர் சிறுநீர் கழிப்பதற்காக கழிப்பறையில் உட்கார்ந்துள்ளார்.
அப்போது அவர் மர்ம உறுப்பில் ஏதோ ஒன்று கடித்தது. அப்போது, வலியால் எழுந்த அந்த நபர் கழிப்பறை கிண்ணத்தை பார்த்தார். கழிவறை கிண்ணத்தைப் பார்த்தவுடன் அலறி கத்தினார். அந்த கழிப்பறை கிண்ணத்தில் மலைப்பாம்பு இருந்தது.
இதனையடுத்து, பாம்பு பிடிப்பதில் கில்லாடியான வெர்னர் என்பவர் அங்கு வரவழைக்கப்பட்டார். இதையடுத்து வெர்னர் பாம்பை பிடித்து அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தார். இந்த சம்பவத்தில் முதியவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்டவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அங்கு உடனடியாக விரைந்து வந்த போலீசார் பாம்பு வைத்திருந்த இளைஞரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
