10 வயதில் 80 வயது தோற்றம் - அரியவகை நோயால் பாதிக்க சிறுமி மரணம்!

world
By Nandhini Jul 06, 2021 07:54 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

உக்ரைன் நாட்டில் 80 வயது தோற்றத்துடன் அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்த 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். Progeria என்ற அரியவகை நோயால் இறந்த இச்சிறுமியால் பெற்றோரையும், உக்ரைன் நாட்டு மக்களையும் கண்ணீரில் ஆழ்ந்துள்ளது.

உக்ரைன் நாட்டின் Vinnytsia பகுதியை சேர்ந்த சிறுமி, தமது சிகிச்சைக்காக தனது ஓவியங்களை விற்று நிதி திரட்டி வந்தார். முக்கிய சிகிச்சைக்காக அமெரிக்கா திரும்ப வேண்டிய நிலையில், திடீரென்று சிறுமி மரணமடைந்துள்ளார்.

இது குறித்து அச்சிறுமியின் தாயார் கூறுகையில், ஒருமுறை பாரிஸ் நகரத்திற்கு செல்ல வேண்டும், பிரான்சில் தமது ஓவியங்களை காட்சிப்படுத்த வேண்டும் என்று என் மகள் மிகவும் ஆசைப்பட்டாள். Progeria என்ற அரியவகை நோயால் அவதிப்பட்டு வந்த என் மகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 ஆண்டுகளில் மனித உடலில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்தும் ஏற்பட்டு வந்தது. என் மகளின் சிகிச்சைக்காக நிதியுதவி அளித்த பலருக்கு எனது நன்றி என கவலையுடன் தெரிவித்தார். 

10 வயதில் 80 வயது தோற்றம் - அரியவகை நோயால் பாதிக்க சிறுமி மரணம்! | World

10 வயதில் 80 வயது தோற்றம் - அரியவகை நோயால் பாதிக்க சிறுமி மரணம்! | World

10 வயதில் 80 வயது தோற்றம் - அரியவகை நோயால் பாதிக்க சிறுமி மரணம்! | World