பிரித்தானியாவில் அச்சுறுத்த கால்பதிக்கும் 'லாம்ப்டா கொரோனா' : மக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த நிபுணர்கள்!

world
By Nandhini Jul 05, 2021 07:14 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

பிரித்தானியாவில் மெதுவாக பரவத் தொடங்கியிருக்கும் ‘லாம்ப்டா’ கொரோனா சற்று மாறுபாட ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பெரு நாட்டில் முதல்முறையாக அடையாளம் காணப்பட்ட இந்த ‘லாம்ப்டா’ கொரோனா நோயாளிகளில் சற்று மாறுபட்டுள்ளது. இது குறித்து மருத்துவ குழு தெரிவித்ததாவது -

தற்போது, 6 பேர் ‘லாம்ப்டா’ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘லாம்ப்டா’ கொரோனா இதற்கு முன் இருந்த கொரோனாவை விட வீரியம் அதிகமாக இருக்கும்.

இந்த ‘லாம்ப்டா’ கொரோனா மிக எளிதாக பரவக்கூடியது. ‘லாம்ப்டா’ கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உறுதி. இதனால், உயிர்ப்பலியை அதிகரிக்குமா என்பது கணிக்க முடியவில்லை. அது தொடர்பாக, ஆய்வை முன்னெடுக்க வேண்டும் என்றது.

இந்நிலையில், சிலி பல்கலைக்கழக நிபுணர்களும், பிரேசிலிய மற்றும் இங்கிலாந்து மாறுபாடுகளை விட ‘லாம்ப்டா கொரோனா’ அச்சுறுத்தல் மிகுந்தது என சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரித்தானியாவை பொறுத்தமட்டில் அடையாளம் காணப்பட்ட 6 பேர்களும் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் என்றே தெரிவித்திருக்கிறார்கள். தற்போதைய நிலவரப்படி 26 நாடுகளில் ‘லாம்ப்டா’ கொரோனா மாறுபாடானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

எனவே, மக்கள் மிகவும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 

பிரித்தானியாவில் அச்சுறுத்த கால்பதிக்கும்