ஆஸ்திரேலியாவில் இளம் பெண் தன் மார்பழகை மேம்படுத்த செய்த செயல் - வைரலாகும் புகைப்படம்!

world
By Nandhini Jul 05, 2021 06:53 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆஸ்திரேலியாவில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய மார்பகம் மற்றும் அழகு சிகிச்சைக்காக, ஒரு பிராட்ஸ் பொம்பை போல் தோற்றமளிக்க சுமார் முப்பதாயிரம் பவுண்ட் வரை செலவு செய்து வருகிறார்.

ஆஸ்திரேலியா Vienna-வை சேர்ந்த Jessica Bunnington என்ற 20 வயது இளம் பெண், தன்னுடைய 18 வயதில், தான் சேமித்து வைத்த பணத்தை எல்லாம் வைத்து முதன் முதலில், தன்னுடைய மார்பக அறுவை சிகிச்சைக்காக செலவு செய்துள்ளார். இதுவரை இவர் இரண்டு மார்பக அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

இதனையடுத்து, 3-வது திட்டமும் வைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஏனெனில், அவர் நான் ஒரு Bratz doll பொம்பைப் போல் இருக்க வேண்டுமாம். எதிர்காலத்தில் இன்னும் அதிக அறுவை சிகிச்சைகள் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் Jessica கூறுகையில், நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை தோற்றத்தை ரொம்ப விரும்புகிறேன். நான் இரண்டு மார்பக அறுவை சிகிச்சைகள் செய்துள்ளேன்.

நான் இயற்கையாகவே இருக்க விரும்பம் இல்லை. நான் ஒரு செயற்கை பொம்மை போல இருக்க ஆசைப்படுகிறேன்.

குறிப்பாக Bratz doll பொம்மை போல் இருக்க வேண்டும். அதுதான் என் கனவு, ஆசை. ஏனெனில் அவற்றின் உதடுகள் பெரிதாகவும், அழகாகவும் இருக்கிறது.

எனக்கு உதடு மிகவும் பிடிக்கும், அதை பெரிதாக விரும்புகிறேன், அதற்காக தேவையான அனைத்தும் செய்து வருகிறேன்.

இப்படி செய்வதால், என்னை சிலர் நான் பைத்தியம் என்று நினைக்கிறார்கள், ஆனால், அவர்களிடம் நான் மிகவும் இயற்கைக்கு மாறானவர் என்றார்.

இவரின் இந்த மார்பக அறுவை சிகிச்சைக்கு ஆரம்பகட்டத்தில் இவரின் குடும்பத்தினர் ஒத்துக் கொள்ளவில்லை, அதன் பின், அவர்களை Jessica சமாதானப்படுத்தி ஒத்துக்கொள்ள வைத்துள்ளார்.

அறுவை சிகிச்சையில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததால், குடும்பத்தினர் அவரை எதிர்த்துள்ளனர்.

இதனால், அவர்களை விட்டு இவர் பிரிந்துவிட்டார். இவர் இளமையாக இருந்த போது பெற்றோர் கண்டிப்புடன் வளர்த்து வந்துள்ளனர். எந்த ஒரு மேக்கப்பும் போட இவருடைய பெற்றோர் அனுமதி கொடுக்கவில்லை.

அது இவருக்கு காலப்போக்கில் மனஅழுத்தத்தில் தள்ளியுள்ளது.

மேக்கப் போடாமல் இவர் தான் அழகாக இல்லையே என்ற ஏக்கமும் இருந்து வந்துள்ளது. இவர் கண்களுக்கு பிற மிகவும் பெண்கள் அழகாக தெரிந்துள்ளனர். அதன் பின்னரே இவர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.

இதற்காக அவர் சுமார் 30000 பவுண்ட் வரை செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் அழகிற்காக தொடர்ந்து என்னவெல்லாம் செய்யணுமோ அதை எல்லாம் செய்து வருவதாக கூறியுள்ளார்.