பிரித்தானியாவில் கல்லாக மாறும் 5 மாத பெண் குழந்தை! நெஞ்சை உலுக்கும் பின்னணி!
பிரித்தானியாவில் 5 மாத பெண் குழந்தை ஒன்று கல்லாக மாறும் அரிதான மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவைச் சேர்ந்த தம்பதிகள் அலெக்ஸ் மற்றும் டேவ். இவர்களுக்கு கடந்த ஜனவரி 31-ம் தேதி லெக்ஸி ராபின்ஸ் என்ற பெண் குழந்தை பிறந்தது.
இந்த குழந்தையின் கை விரல்கள் அசைவின்றி இருந்ததை கண்டு பெற்றோர் மருத்துவர்களிடம் கொண்டு போய் காண்பித்தனர். இதனையடுத்து, மருத்துவர்கள் அக்குழந்தையை பரிசோதனைக்குட்படுத்தினர்.
அப்போது பரிசோதனையில், அந்தக் குழந்தைக்கு Fibrodysplasia Ossificans Progressiva (FOP) என்னும் மிகவும் அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். 2 மில்லியன் பேரில் ஒருவரை மட்டும்தான் இந்நோய் தாக்குமாம். இந்த FOP நோயானது ஒருவரின் உடலில் உள்ள தோலை கொஞ்சம் கொஞ்சமாக கல்லாக மாற்றிவிடுமாம்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 40 ஆண்டுகள் மட்டுமேதான் வாழ முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நோயால்பாதிக்கப்பட்டவர்கள் 20 வயதிலேயே படுத்த படுக்கையாகி விடலாம்.
இந்த குழந்தைக்கு தற்போது எந்த சிகிச்சையும் கிடையாது என்றும், குழந்தைக்கு எந்தவொரு ஊசியும், தடுப்பூசியும் செலுத்த முடியாது என்றும், எதிர்காலத்தில் இந்தக் குழந்தை வளர்ந்த பின் இவளால் குழந்தை பெற்றெடுக்கவும் முடியாது என்று மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் கூறியுள்ளனர்.