ஆன்லைன் வகுப்பில் வீடியோவை ஆஃப் செய்யாமல் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த மாணவன் - அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்!
வியட்நாமின் ஹோ சி மின் நகரத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் வகுப்பின் போது பெண் ஒருவருடன் தனிமையில் நெருக்கமாக இருந்துள்ளார்.
வகுப்பு நடந்துகொண்டிருக்கும் போது மொபைலில் வீடியோவை ஆஃப் செய்யாமல் மாணவர், ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருந்ததை கண்ட, பேராசியர் மற்றும் சக மாணவ, மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேராசிரியர் அந்த மாணவரை எச்சரித்த பின்னரே, வீடியோவை அவர் ஆஃப் செய்துள்ளார். இவ்வாறு நடந்த பின்னர், மாணவர் அவசர அவசரமாக ஆடைகளை அணிந்துள்ளார்.
இந்த மாணவர் குறித்த செயல் சமூகவலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்தச் செயலுக்கு பலரும் அவரைக் கிண்டல் செய்து வருகின்றனர்.
மேலும், தனது செயலுக்காக மாணவர் பேராசிரியர், சக மாணவர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் மன்னிப்பு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாணவரின் இந்த செயலால், ஆன்லைன் வகுப்புகளில் ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாம்.
