சாத்தானிடம் நான் ஒப்பந்தம் செய்தேன் - சகோதரிகள் இருவரை கொடூரமாக கொலை செய்த பிரித்தானிய இளைஞர்!
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த சகோதரிகள் கொலை செய்த வழக்கில், கைதாகியுள்ள தன்யல் ஹுசைன் என்ற இளைஞர், போலீஸ் விசாரணையில், அளித்த வாக்குமூலம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Bibaa Henry (46), Nicole Smallman (27) ஆகிய இரண்டு பெண்கள் Wembley என்ற பூங்காவில் சடலமாக போலீசார் மீட்டனர்.
சம்பவத்தன்று Bibaa Henry-ன் பிறந்தநாளை பூங்காவில் இருவரும் மகிழ்ச்சியாக கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். அப்போது, தன்யல் ஹுசைன் என்பவர் கத்தியால் இருவரையும் தாக்கி கொடூரமாக கொலை செய்தார்.
இதனையடுத்து, தன்யல் ஹுசைன் ஓராண்டாக போலீசார் வலைவீசி தேடிவந்தனர். இந்நிலையில், தற்போது, தன்யல் ஹுசைனை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் சொன்ன தகவல் போலீசாரையே திடுக்கிட வைத்தது. நான், சாத்தானுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாகவே இருவரையும் பலி கொடுத்தேன் என்று கூறினான்.
அதுமட்டுமல்லாமல், லாட்டரி சீட்டில் பெருந்தொகை வெல்வதற்காக தனது இரத்தத்தால் எழுதி பேய்யுடன் கொடுத்தேன் என்றும், இதற்காக ரத்த பலி கொடுப்பதாக சாத்தானிடம் உறுதி அளித்தேன்.
எனக்கு பள்ளி நாட்களில் காதலி கிடைக்க வேண்டும் என்பதற்காக சாத்தானிடம் நான் என்னுடைய ரத்தம் கொடுத்திருக்கிறேன். நான் இருவரையும் திட்டமிட்டு கொலை செய்ய வில்லை.
சாத்தானுடனான ஒப்பந்தம் செய்த காரணத்தினால்தான் பலி கொடுத்தேன் என்று விசாரணையில் தெரிவித்துள்ளான்.
இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை அடுத்த சில நாட்களிலும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.