உலக நாடுகளில் உருமாறிய கொரோனாவுக்கு புதிய பெயர் வைப்பு – உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா வைரஸ் ஆண்டின் இறுதியில் உருமாறியது. இதை சில நாடுகளில் கண்டுபிடித்தது.
இந்தியாவில் பரவலாகக் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் உலகளவில் 44 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட B.1.617.2 கொரோனா வகை டெல்டா என அழைக்கப்படும் என்றும். அதே போல இந்தியாவில் கடந்த அக்டோபரில் முதல் முறையாக கண்டறியப்பட்ட B.1.617.1 எனும் கொரோனா வகை இனி ‘கப்பா’ (Kappa) வேரியண்ட் என அழைக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.
இந்த புதிய பெயர்கள் க்ரீக் எழுத்துக்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
மேலும், பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா ‘Alpha’ என்றும், தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா ‘Beta’ என்றும், பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வகை ‘Gamma’ என்றும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா ‘Epsilon’ என அழைக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
