செல்போனிலேயே நோய்களை கண்டறியும் புதிய வசதி - கனடாவில் இந்திய ஆய்வாளர்கள் குழு அசத்திய சாதனை!
இந்திய ஆய்வாளர் ஒருவரும் அவரது குழுவினரும், கனடாவில் ஸ்மார்ட்போனில் 1 மணி நேரத்திற்குள் நோய்களைக் கண்டறியும் வசதி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்த அசத்தியிருக்கிறார்கள்.
இந்தியாவில், சட்டீஸ்கரைச் சேர்ந்த ரிச்சா பாண்டே (31). இவர் இந்திய ஆய்வாளர். இவர் தலைமையிலான குழு, சிறுநீரக தொற்று முதலான தொற்றுகளை கண்டறியும் ஸ்மார்ட்போன் பரிசோதனை ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள்.
தற்போது, அவர்கள் கொரோனாவைக் கண்டறியும் ஸ்மார்ட்போன் பரிசோதனையையும் உருவாக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.
ஒன்ராறியோவிலுள்ள McMaster பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள இந்த தொழில்நுட்பத்தில், மைக்ரோசிப் பொருத்தப்பட்ட உள்ளங்கைக்குள் அடங்கக்கூடிய கருவி ஒன்றில், இரத்தம், சிறுநீர் முதலானவை வைக்கப்பட்டு குறிப்பிட்ட தொற்றைக் காட்டும் புரதத்தைக் கண்டறியும் சோதனை செய்யப்படுகிறது.
பின்னர் USB போன்று காட்சியளிக்கும் இந்த சிறிய கருவி ஸ்மார்ட்போன் ஒன்றுடன் இணைக்கப்பட, ஸ்மார்ட்போனில் சோதனையின் முடிவு காட்டப்படுகிறது. பிற சோதனை முறைகளில் இத்தகைய பரிசோதனைகள் முடிந்து முடிவுகள் கிடைக்க 2 நாட்கள் வரை ஆகுமாம்.
இந்நிலையில், இந்த ஸ்மார்ட்போன் சோதனையில் 1 மணி நேரத்திற்குள் பரிசோதனை முடிவுகள் கிடைத்துவிடுகிறது.
