உடல் எடை குறைந்து எலும்பும் தோலுமாக மாறியப்போன கிம்!

world
By Nandhini Jun 30, 2021 06:51 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

புகைப்படம் வைரல் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன். இவர் கடைசியாகப் பிப்ரவரி மாதம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதன் பிறகு, சில நாட்களாக அவர் எவ்வித நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை.

அவர் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்பது குறித்த எந்தவிதமான தகவலும் வெளிவரவில்லை. இதனையடுத்து, அதிபர் கிம் ஜாங் உன், கடந்த ஜூன் 6ம் தேதி முதல்முதலாக பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது அவர் உடல் எடை குறைந்து காணப்பட்டார். இதைக் கண்ட பொதுமக்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தார்கள்.

பழைய படங்களுடன் அவரது தற்போதைய படத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிகவும் வித்தியாசம் தெரிந்தது. அவரது உடல் எடை இழப்புக்கான காரணம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை.

கிம் - சுமார் 170 சென்டிமீட்டர் உயரமும், 140 கிலோ எடையும் இருந்தார். தற்போது, சுமார் 10 முதல் 20 கிலோ உடல் எடை இழந்துள்ளார். இந்நிலையில், கிம் ஜாங் உன்னின் எடை இழப்பு விவகாரம் தற்போது, வடகொரியா நாட்டு மக்களை கவலையை கொடுத்துள்ளது. 

அதிபரின் எடை இழப்பு குறித்து வட கொரியாவில் உள்ள அனைவருமே மனமுடைந்து போயுள்ளதாக, தங்களுக்கு இது கண்ணீர் வரவழைப்பதாகவும் பியோங்யாங் நகரவாசி ஒருவர் ஊடகத்தில் பேட்டி அளித்துள்ளனர். 

இது குறித்து, நேஷனல் யூனிஃபிகேஷனின் மூத்த ஆய்வாளர் கூறுகையில், ஹாங் மின் கிம்மின் உடல் எடை இழப்பு, நோயின் அறிகுறி இல்லை. அவர் உடல் நலப் பிரச்சினைகளை சந்தித்திருந்தால், தொழிலாளர் கட்சியின் மத்திய குழுவின் முழுமையான கூட்டத்தை கூட்ட அவர் பொதுவெளியில் வெளியே வந்திருக்க மாட்டார் என்றார்.