11 வயதில் குழந்தையை பெற்றெடுத்த சிறுமி : பெற்றோர்கள் பேரதிர்ச்சி!
பிரித்தானியாவில் 11 வயது சிறுமி ஒருவர் பிள்ளையை பெற்றெடுத்து தாயாகியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, சமூக சேவைகள் மையம் மற்றும் நகர சபைத் தலைவர்கள் விசாரணை முன்னெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இச்சிறுமி மிக இளவயது என்பதால் சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறாள். தற்போது, தாயும் சேயும் நலமாக உள்ளனர்.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், கர்ப்பமாக இருப்பதை மக்கள் உணராததன் மர்மம் தங்களுக்கு புரியவில்லை. 2,500 பேர்களில் ஒருவருக்கு தாம் கர்ப்பிணியாக இருப்பது தெரியாது அல்லது மறைத்துவிடுவதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
பெற்றோர்கள் கூறுகையில், சிறுமி கர்ப்பமடைந்ததும், குழந்தை பெற்றெடுத்துள்ளதும் தங்களுக்கு கடும் அதிர்ச்சியான தகவல் என்று தெரிவித்துள்ளனர்.
2006ம் ஆண்டு 12 வயதில் ட்ரெஸா மிடில்டன் என்ற சிறுமி குழந்தை பெற்றெடுத்த விவகாரம் நாடு முழுவதும் பரவலாக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
