16 வயது சிறுவனை உயிருடன் உடலை கிழித்து கடித்து தின்ற கரடி - சைபீரியாவில் பயங்கரம்
சைபீரியாவில் உள்ள ஒரு தேசிய பூங்காவில் கரடி ஒன்று 16 வயது சிறுவனை தாக்கி தின்ற சம்பவத்தால் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சைபீரியாவில் உள்ள Krasnoyarsk மாகாணத்தின் தேசிய பூங்காவில் கடந்த திங்கட்கிழமை அன்று கரடி ஒன்று சுற்றுலா பயணிகளை தாக்கியது. அந்த சுற்றுலா பயணிகளில் 16 வயதுள்ள ஒரு சிறுவனை பிடித்து, தரதரவென இழுத்துச் சென்று உடலை கிழித்து கடித்து தின்றது.
அந்த கரடியை அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் அந்த கரடியை கத்தியால் குத்தினார். அப்போது, அங்கிருந்த மக்கள் உடனடியாக காவலர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு காவலர்கள் விரைந்து வந்தனர்.
துப்பாக்கியுடன் வந்த காவலர்களை பார்த்தவுடன் கரடி காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடியது. இதனையடுத்து, பல மணி நேரம் போராடி காவலர்கள் கரடியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். பூங்காவில் உள்ள நிர்வாகிகள், அந்த கரடிக்கு தேவையான உணவு கொடுக்காததால் தான் அந்த கரடி இப்படி தாக்கியதாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
