கொரோனாவை அடுத்து கனடாவை உலுக்கி எடுக்கும் அபூர்வ வகை உயிர்க்கொல்லி நோய்!

world
By Nandhini Jun 25, 2021 12:11 PM GMT
Report

கனடாவில், அபூர்வ வகை உயிரைக் கொல்லக்கூடிய ஒட்டுண்ணி ஒன்றால் உருவாகும் புற்றுநோய் போன்ற ஒரு நோய் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் காணப்படும் ஒரு நோய் அல்வியோலர் எக்கினோகோகோசிஸ் (AE). நாடாப்புழுக்களின் முட்டைகள் வயிற்றுக்குள் சென்றுவிட்டால், அவை உடல் உறுப்புகளுக்குள் சென்று பதுங்கிக்கொள்ளுமாம்.

பிறகு அவற்றைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிரைக் கொல்லக்கூடிய புற்றுநோய்க் கட்டிகள் போல அவை மாறிவிடுமாம்.

தற்போது, ஆல்பர்ட்டாவில் இந்த வகை நோய் அதிகளவில் பரவி வருவதாக ஆல்பர்ட்டா அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். ஏற்கெனவே, 2013க்கும் - 2020க்கும் இடையில், இதுவரை 17 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அந்த 17 பேருக்கும் அறுவை சிகிச்சை பலனளிக்காத நிலையில், ஒட்டுண்ணிகளுக்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன. அவர்களில் ஒருவர் அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய பிரச்சினைகள் காரணமாக உயிரிழந்து விட்டார்.

தற்போது திடீரென இந்த நோய் ஏன் ஆல்பர்ட்டாவில் அதிகரித்து வருகிறது என்பது மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒருவேளை நாய்களால் இந்நோய் அதிகரித்துள்ளதா? என்றும், நாய்களுக்கும் இந்நோய்க்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா? என்றும் மருத்துவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

ஆகவே, நாய்கள் மற்றும் வனவிலங்குகள் எதையாவது தொட்டால், கைகளை நன்றாகக் கழுவுமாறும், சுய சுத்தத்தை கடைப்பிடிக்குமாறும் மருத்துவ நிபுணர்கள் அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 

கொரோனாவை அடுத்து கனடாவை உலுக்கி எடுக்கும் அபூர்வ வகை உயிர்க்கொல்லி நோய்! | World