உயரத்தை பார்க்காமல் மனதைப் பார்த்து காதலித்த பிரித்தானிய ஜோடி - உலக கின்னஸ் சாதனை
பிரித்தானியாவில் லண்டனைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (33). இவர் விபரீத டிஸ்ப்ளாசியா என்ற மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டவர். இதனால், இவரது எலும்பு மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதனால், அவரால் சராசரி மனிதன் உயரத்தில் வளர முடியாமல் போனது. ஜேம்ஸ்சின் உயரம் 3 அடி, 7 அங்குலம் தான்.
2012ம் ஆண்டு, ஜேம்ஸ் தனது சொந்த ஊர் வழியாக ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் சென்றார். அப்போது, சில நண்பர்கள் மூலம் ஷோலி அறிமுகமானார். ஷோலியின் முதல் பார்வையிலேயே ஜேம்ஸுக்கு காதல் மலர்ந்தது. ஆனால், ஷோலி உயரமான ஆண்களை விரும்பினார்.
இருப்பினும், ஜேம்ஸ் விடாமல் ஷோலியை சந்தித்து பேசிப் பழகிக்கொண்டு வந்தார். காலப்போக்கில் ஷோலியும் ஜோம்ஸை காதலிக்க ஆரம்பித்தார். இருவரும் 2013ம் ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த அசாதாரண தம்பதியினருக்கு இப்போது ஒலிவியா என்ற இரண்டு வயது மகள் உள்ளார். இத்தம்பதியினரின் உயரம் வித்தியாசமே, இவர்களுக்கு ஜூன் 2ம் தேதி அன்று உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க வைத்துள்ளது.
இந்த சிறப்பு தம்பதிக்கு 'ஆண் உயரம் குறைவு, பெண் உயரம் அதிகம்' என்ற பிரிவில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது.