ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பெற்றெடுத்ததாக நாடகமாடிய பெண் - உலக சாதனை கேள்விகுறியானது?

world
By Nandhini Jun 23, 2021 07:12 AM GMT
Report

ஒரு குழந்தை கூட பெற்றெடுக்காமல் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்ததாக சொல்லி நாடகமாடியது உலகமெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியா நகரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் கோசியாம் தாமரா சிட்ஹோல் (37) என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

பிரசவத்தில் அறுவை சிகிச்சை மூலமாக 10 குழந்தைகள் பிறந்ததாக தகவல்கள் வெளியாகி உலகளவில் பரவியது. பிறந்த 3 பெண் குழந்தைகளும், 7 ஆண் குழந்தைகளூம் சில மாதங்கள் இன்குபெட்டரில் வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என்று சொல்லி இன்குபெட்டரில் இருக்கும் குழந்தைகள் படமும் சமூகவலைத்தளத்தில் வெளியானது.

இந்த செய்தியை பார்த்ததும் சம்பந்தப்பட்ட மருத்துவமனை, எங்கள் மருத்துவமனையில் இதுபோன்ற பிரசவம் எதுவும் நடக்கவில்லை என்று போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து, போலீசார், மருத்துவர்கள் உதவியுடன் கோசியாமை விசாரணையை மேற்கொண்டனர்.

ஒரே பிரசவத்தில் 10 குழந்தை பெற்றெடுத்ததாக நாடகமாடிய பெண் - உலக சாதனை கேள்விகுறியானது? | World

விசாரணையில், மருத்துவர்களின் பரிசோதனையில், பிரசவம் நடந்ததற்காகன எந்த தடயமும் இல்லை. சிசேரியன் மூலம் குழைந்த பெற்றதாக கூறப்படும் நிலையில், வயிற்றில் எந்த அறுவை சிகிச்சையும் செய்த அடையாளம் இல்லை.

இந்நிலையில், அவருக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று அவரை போலீசார் மனநல மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர்.