பாகிஸ்தானிடமிருந்து ஆயிரக்கணக்கான கழுதைகளை வாங்கி குவிக்கும் சீனா! வெளியான பின்னணி!

world
By Nandhini Jun 18, 2021 01:23 PM GMT
Report

உலகளவில் அதிக கழுதைகளை கொண்ட மூன்றாவது நாடு பாகிஸ்தான். கடந்த 2021ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி பாகிஸ்தானில், எருமைகளின் எண்ணிக்கை 12 லட்சமாகவும், ஆடுகள் எண்ணிக்கை 3.2 கோடியில் இருந்து 3.5 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.

தற்போது பாகிஸ்தானில் 56 லட்சம் கழுதைகள் இருக்கின்றன. பாகிஸ்தான் தனது நாட்டில் கழுதைகளின் இனப்பெருக்கத்தை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் சீனா தானாம். சீனாவில் கழுதைகளுக்கு அதிகளவில் கிராக்கி இருக்கிறது. கழுதை பால் பல்வேறு நோய்களை குணப்படுத்துகிறது.

ஆண்மையை அதிகரிக்கும் கொழுப்பு சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் கழுதைப்பாலில் உள்ளது.

இதனால், பாகிஸ்தானிடமிருந்து வருடம் தோறும் 80 ஆயிரம் கழுதைகளை சீன நிறுவனங்கள் வாங்கி கொண்டு, மருந்துகளை தயாரித்து வருகின்றன. இதன் மூலமாக பல கோடி ரூபாயை பாகிஸ்தான் வருமானமாக ஈட்டுகிறது. மேலும், சீனாவிடமிருந்து பெற்றுள்ள பல ஆயிரம் கோடி கடனை, கழுதைகளை விற்று பாகிஸ்தான் அரசு சரிக்கட்டி வருகிறது.

இதன் காரணமாகவே, கழுதைகள் இனப்பெருக்கத்தை பெருக்குவதில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஆர்வம் காட்டி வருகிறார். கழுதைக்காகவே பாகிஸ்தானில் தனி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறதாம். 

பாகிஸ்தானிடமிருந்து ஆயிரக்கணக்கான கழுதைகளை வாங்கி குவிக்கும் சீனா! வெளியான பின்னணி! | World