உஹான் ஆய்வக இரகசியங்களை சொன்ன சீன உளவுத்துறை அதிகாரி - விசாரணையை முடுக்கியுள்ள அதிபர் ஜோ!
சீனாவில் உளவுத்துறையில் மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்காவுக்குத் தப்பித்து வந்துள்ளார். உஹான் ஆய்வகம் குறித்த இரகசியங்களை வெளியிட்டதாக தகவல் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீன பாதுகாப்புத் துறையில் துணை அமைச்சராகவும், சீன உளவுத்துறையில் முக்கிய அலுவலராகவும் இருந்தவர் டாங் ஜின்வி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி தன் மகளுடன் சீனாவிலிருந்து தப்பித்து அமெரிக்கா வந்ததாகவும், அவர் தான் வுஹானிலுள்ள ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியது தொடர்பான ரகசியங்களை அமெரிக்காவுக்கு அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.
அதனையடுத்து, அமெரிக்க அதிபரான ஜோ பைடன் உஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா பரவியதா என்பதை அறிவதற்கான விசாரணையை முடுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில், டாங் சீனாவில் ஒரு துணை அமைச்சராக இருந்தவர் என்பதால், இப்படி சீனாவிலிருந்து தப்பி வந்தவர்களில் உயர் மட்ட அலுவலர் அவராகத்தான் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
