பெரிய வாளில் கேக் வெட்டி கொண்டாடிய எலிசபெத் மகாராணி: வைரல் வீடியோ!

world
By Nandhini Jun 14, 2021 04:59 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஜி7 மாநாட்டு நிகழ்வில் பிரிட்டன் நாட்டில் அரச குடும்பத்தை சார்ந்த 95 வயதான மகாராணி இரண்டாம் எலிசபெத் வாள் ஏந்தி கேக் வெட்டிய வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஜி7 கூட்டமைப்பின் 47வது உச்சி மாநாடு, பிரிட்டனின் கார்ன்வால் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில், இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தும் பங்கேற்றார்.

அவருடன் இளவரசர் சார்ல்ஸ், அவரது மனைவி கெமில்லா மற்றும் பேரன் வில்லியம் ஆகியோரும் கலந்து கொண்டனர். கணவர் ஃபிலிப் மறைவுக்குப் பிறகு, குடும்பத்துடன் இங்கிலாந்து ராணி கலந்து கொள்ளும் முதல் நிகழ்ச்சி இதுதான்.

இந்த நிகழ்வின் ஒருபகுதியாக நடைபெற்ற கொண்டாட்டதில் மகாராணி எலிசபத் கேக் வெட்டியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக வாள் கொண்டு கேக்கை வெட்டியுள்ளார்.

ராணி வாள் கொண்டு வெட்ட முயன்ற போது கத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இது கொஞ்சம் வித்தியாசமானது” என ராணி தெரிவித்துள்ளார்.

அதை கேட்டு அங்கு கூடியிருந்த அனைவரும் சிரித்துள்ளனர். இந்த மாநாட்டில் பிரிட்டன் மக்கள், கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.