ஜார்ஜ் பிளாய்ட் கொலையை வீடியோ எடுத்த பெண்ணுக்கு உயரிய விருது அறிவிப்பு!
அமெரிக்க காவல்துறையினரால் கறுப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்ட் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த நிகழ்வு உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்வை உலகத்திற்கே அடையாளம் காட்டிய 18 வயது இளம்பெண்ணுக்கு பெருமைமிக்க புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2020ம் ஆண்டு மே 25ம் தேதி அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தின் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை மின்னிகியூ போலீஸ் நகர காவல்துறை அதிகாரி கழுத்தில் அழுத்திய போது ஜார்ஜ் மூச்சுத்திணறிக்கொண்டிருந்தார்.
இதை அங்கு நின்றுக்கொண்டிருந்த 18 வயது கொண்ட அமெரிக்க இளம்பெண் டார்னெல்லா ஃபிரேஸர் சிறிதும் பயம் இல்லாமல், தைரியமாக செல்போனில் பதிவு செய்தார்.
இந்த வீடியோ பதிவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு உலக மக்களுக்கு தெரியவைத்தார். இவரை பெருமைப்படுத்தும் விதமாக டார்னெல்லாவிற்கு உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
