பிரிட்டனில் 2 அடி உயரத்தில் பிறந்த குழந்தை!
பிரிட்டனில் இளம்பெண் ஒருவருக்கு 2 அடி உயரம் கொண்ட அழகான குழந்தை பிறந்துள்ளது. இந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரிட்டனின் பக்கிங்கம் ஷைர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாக். இவருடைய மனைவி ஏமி (27). இந்நிலையில், கர்ப்பம் தரித்திருந்த ஏமி லண்டன் மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார்.
பிரசவத்தில் ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தை 2 அடி உயரமும் 5.5 கிலோ எடையுடனும் பிறந்துள்ளது. சராசரி குழந்தையைவிட இந்த குழந்தை இரண்டு மடங்கு பெரியதாக உள்ளது.
அறுவை சிகிச்சையின்போது இந்த குழந்தையை, இரண்டு மருத்துவர்கள் சேர்ந்து வெளியே எடுத்துள்ளனர். குழந்தையின் எடையைப் பார்க்கும் இயந்திரத்தின் மீது வைக்க முடியாத அளவுக்கு அந்த குழந்தை பெரிதாக இருந்துள்ளது. தற்போது இந்த குழந்தைக்கு ஜாக்ரிஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏமி கூறுகையில், என் குழந்தை உயரமாக பிறக்கும் என்பதை நான் 'ஸ்கேன்' மூலம் முன்பே அறிந்திருந்தேன். இருந்தாலும் இவ்வளவு உயரமாக பிறக்கும் என்று நாங்கள் நினைக்கவில்லை என்றார்.
