காதலியை ரகசிய திருமணம் செய்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தன் காதலி ஹேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
போரிஸ் ஜான்சனுக்கு ஏற்கெனவே 2 முறை திருமணம் நடந்து விவாகரத்து ஆகியுள்ளது. ஜான்சனுக்கு இது 3-வது திருமணம்.
பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்சன் (56), ஹேரி சைமண்ட்ஸ் (33) என்பவருடன் கடந்த சில ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு கடந்த ஆண்டு ஒரு குழந்தை பிறந்தது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்ளப்போவதாக இருவரும் அறிவித்தனர். இந்நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சன் கேரி சைமண்ட்ஸை ரகசிய திருமணம் செய்துள்ளார். லண்டனில் உள்ள ஒரு தேவாலயத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இந்த திருமணத்திற்கு சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, சமூகவலைத்தளங்களில் போரிஸ் ஜான்சன் - ஹேரி சைமண்ட்ஸ் தம்பதியருக்கு பலர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.